Posts

Showing posts from July, 2025

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை பெருமையுடன் நினைவுகூர்வோம்

 #இன்று_நடிகர்திலகம்_சிவவாஜி_கணேசன்_நினைவுநாள் #அவர்_புகழ்_பாடுவோம்.சிவாஜி கணேசன் (Sivaji Ganesan, 1 அக்டோபர் 1928 – 21 சூலை 2001) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி ஆகும். ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த சிவாஜி கணேசன், 1952 இல் பி. ஏ. பெருமாள் முதலியார் என்பவர் தயாரித்த பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். வித விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதில் திறம்பட நடிப்பது இவரின் தனி திறனாகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 288 படங்களில் நடித்துள்ளார். தமிழ்த் திரைப்படத்துறையில் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன்.  சிவாஜி கணேசன், பிறப்பு ... நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி, சிம்மக்குரலோன் என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்படுகின்றார். நீண்ட வசனங்களை எளிதில் உள்வாங்கிக் கொண்டு அதை உணர்ச்சி...

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர் சங்கத்தின் இரண்டாவது ஆண்டு பொதுக்குழு கூட்டம்

Image
19_7_25 அன்று திருச்சியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர் சங்கத்தின் இரண்டாவது ஆண்டு பொதுக்குழு மிகவும் சிறப்பாக  நடைபெற்றது.பொதுக்குழுவில் 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.சென்னை(தெற்கு) மாவட்ட மையத்திலிருந்து 20 கற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.மாநிலத் தலைவராக தோழர் ப.அருள்ஜோஸ் (திருச்சி) , பொதுச்செயலாளராக தோழர் வீ.முத்துலிங்கம், சென்னை (தெற்கு) உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கட்டுப்படுத்தப்பட்ட அல்லது தெரிந்தெடுக்கப்பட்ட வாக்குரிமை யின் இருண்ட அறிகுறிகள் _தோழர் திபங்கர் பட்டாச்சார்யா.

 வாக்குரிமையின் இருண்ட அறிகுறிகள் தோழர்.திபங்கர் ஜூன் 24, 2025 அன்று திடீரென தொடங்கப்பட்டு பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (எஸ்ஐஆர்) இரண்டாவது வாரத்தில் இருக்கிறோம். கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சிறப்பு தீவிர திருத்தம் நடப்பதை அனைவரும் அறிவோம். இது பாதிதான் உண்மை. இப்போதைய இந்த சிறப்பு திருத்தம் முந்தைய அனைத்து திருத்தங்களிலிருந்தும் அடிப்படையில் வேறுபட்டது. நடந்து கொண்டிருக்கும் தீவிர சிறப்பு திருத்தம், விருப்பமுள்ள, விண்ணப்பிக்கும் வாக்காளர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்களின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலை முழுமையாக மாற்றியமைக்கவழிவகை செய்கிறது. திரும்ப வந்துள்ள துயரம் சிறப்பு திருத்தத்தின் திடீர் அறிவிப்பும் அதன் அப்பட்டமான வெளிப்படையற்றத்தன்மையும் 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் துயர நினைவுகளை மீண்டும் கிளறிவிட்டுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ‘நோட்பந்தி’ என இந்தியில் பிரபலமாக அழைக்கப்பட்டது போல, பீகார் மக்கள் சிறப்பு தீவிர திருத்தத்தை ‘வோட்பந்தி’ என்று அழைப்பது ஒன்றும் அதிசயமில்லை. ஆனால் தேசிய குடிமக்கள் பதிவேடு அமுல்...

TBRGETA திருவல்லிக்கேணி வட்டக் கிளையின் ஐம்பெரும் விழா.#தமிழ்நாடு_ஓய்வுபெற்ற_அனைத்து_அரசுஊழியர்_ஆசிசிரியர்_சங்கம்_திருவல்லிக்கேணி_கிளை. #ஐம்பெரும்_விழா. சென்னை (தெற்கு) மாவட்டம் திருவல்லிக்கேணி வட்டக்கிளையின் சார்பில் சங்கத்தின் அமைப்பு தின விழா உள்ளிட்ட ஐம்பெரும் விழா 11.7.25 அன்று சிறப்பாக நடைபெற்றது. விழாவுக்கு திருவல்லிக்கேணி கிளைத் தலைவர் தோழர் ஆசான் இராம.மோகன்தாஸ் தலைமை வகித்தார்.செயலாளர் தோழர் வீ.முத்துலிங்கம் செயலாளர் செயலர் அறிக்கையினையும் தோழர் ம.சு.சுந்தரமூர்த்தி பொருளாளர் நிதி நிலை அறிக்கையினையும் சமர்ப்பித்தனர். மேதகு நீதியரசர் திரு.E. கிருஷ்ணன் அவர்கள், மேனாள் மாநில துணைத் தலைவர் தோழர் ஆ.ந.ஸ்ரீநாத் அவர்கள், மாவட்ட தலைவர் தோழர் பா.சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், தோழர் லோ‌.இரா.இராசேந்திரன் மாவட்ட செயலாளர் அவர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.தோழர்.இராம.மோகன்தாஸ் அவர்கள் நிறைவுரையாற்றினார். புலவர் இராசகோபாலன் அவர்கள் நன்றியுரை கூறினார்.விழாவில் பெருமளவில் பெண் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.விழாவின் முடிவில் சிறப்பான அறுசுவை மதிய உணவு வழங்கப்பட்டது.

Image

தோழர் பி.ஆர்.சி அவர்களுக்கு நினைவஞ்சலி

Image
1969_72  காலகட்டத்தில் நான் தேசீயக் கல்லூரி மாணவன்.பி.காம் படித்து வந்தேன்.அப்போது பொன்னகரில் எனது அறைக்குப் பக்கத்து அறையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த பொன்னையன் (எம்.ஏ.மாணவர்) தங்கியிருந்தார்.எனது பள்ளிப் பருவத்திலேயே  கம்யூனிஸ்ட் இயக்கம் பற்றி ஓரளவு அறிந்தவன் என்ற முறையில் எனது அறை நண்பர்களுடன்  ஒரு நாள் நடப்பு அரசியல் பற்றி விவாதித்து வந்தேன்.அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பாராளுமன்ற கொறடாவாக விளங்கிய தோழர் ஜோதிர் மாய் பாசு அவர்கள் தனது வாதத் திறமையினால் மிகவும் புகழ் பெற்று விளங்கிய நேரம்.அவரும் சோஷலிஸ்ட் கட்சி தலைவர் மது லிமயேவும் சபை விவாதங்களில் கலந்து பாராளுமன்றத்தையே கலக்கி வந்தனர்.அது பற்றி ஒரு நண்பருடன் கூறினேன்.அந்த நண்பர் பொன்னையன் அவர்களிடத்தில் சென்று " எனது அறையில் ஒரு மாணவர் பாராளுமன்ற நடவடிக்கைகள் பற்றிய நிறைய விவரங்களைக் கூறுகிறார்.அவரை உங்கள் சங்கத்தில் இணைத்துக் கொள்ளுங்கள் " என்றார்.அதனைக் கேட்ட பொன்னையன் என்னிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாணவர் அணியான SFI இல் இணைந்தது கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.அப்போது CPI ...

சங்க மூத்த உறுப்பினர் தோழர் எஸ்.இளஞ்செழியன் அவர்களின் நலம் விசாரித்தல்

Image
நமது சங்கத்தின் மூத்த உறுப்பினர் தோழர் இளஞ்செழியன் அவர்களை 10 நாட்களுக்கு முன்பு தொடர்பு கொண்டு 6 ஆம் தேதிய மாதாந்திர கூட்டத்துக்கு (பள்ளிக்கரனை வட்டக்கிளை) அழைத்தேன்.தற்போது உடல் நலம் இல்லாமல் மருத்துவ சிகிச்சை எடுத்து வருவதாகவும் நலம் பெற்றவுடன் கூட்டத்துக்கு வருவதாகவும் கூறியிருந்தார்.நேற்று கூட்டத்திற்கு வரவில்லை.கூட்டம் முடிந்தவுடன் அவரது இல்லம் சென்று நானும் நமது சங்கப் பொருளாளர் தோழர் ஜி.கன்னையன் அவர்களும் அவரை நலம் விசாரித்தோம்.அவரது உடல் பிரச்சினை மற்றும் அதற்கு மேற்கொண்டு வரும் சிகிச்சை பற்றி விளக்கமாகத் தெரிவித்தார்.உடல் நலம் குன்றி ஓய்வு எடுத்து வரும் நிலையிலும் சங்கத்துக்கு ஆற்ற வேண்டிய கடமையினை அவர் மறக்கவில்லை.அவருக்கும்,அவரது துணைவியாருக்கும் சேர்த்து உறுப்பினர் கட்டணம் ₹700/__ இனைப் பொருளாளரிடம் வழங்கினார்.அவருக்கும் அவரது துணைவியாருக்கும் பள்ளிக்கரனை வட்டக்கிளை சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அவர் முழுமையாக உடல்நலம் பெற்று சங்கக் கூட்டத்தில் கலந்து கொள்ள வாழ்த்துகள். ஏற்கெனவே சங்க உறுப்பினர்கள் ஆக இருந்தவர்கள் 38 பேரில் 10 பேர் மட்டுமே ச...