விடுதலைப் போராட்ட வீராங்கனை ஜல்காரிபாய்
#விடுதலைப்போராட்ட_வீராங்கனைகள்1_ஜல்காரிபாய்_தியாகத்தின்_உருவம் ஜல்காரி பாய் 1857ல் முதல் சுதந்திர போராட்டம் என அழைக்கப்படும் ஓரளவு ஒருங்கிணைக்கப்பட்ட, விரிவாக நடந்த சிப்பாய்களின் எழுச்சியில் ஜான்சிரானி லட்சுமிபாயின் போர் களத்திலிருந்து இன்னும் வீரர்களை திரட்ட தலைமறைவானார். அவரை போலவே வேடமிட்ட ஒரு பெண் போர் களத்திலிருந்து அவரை தப்பிக்க வைத்தார். அந்த 27 வயதுடைய வீரப் பெண்ணின் பெயர் ஜல்காரிபாய். தனது ராணிக்காக தனது உயிரைக் கூட தூக்கியெறிய துணிந்த விசுவாசத்தின் மானுட ரூபம் அவர். 1830ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி ஜான்சிக்கு அருகிலுள்ள போஜ்லா எனும் கிராமத்தில் பிறந்தார். கடுமையான உழைப்பை செலுத்தும் விவசாயிகளான சடோபா சிங் - ஜமுனா தேவி தம்பதியினருக்குப் பிறந்தவர் ஜல்காரிபாய். இவர் தாயின் அரவணைப்பும், அன்பும் அவருக்கு நீண்ட நாள் கிடைக்கவில்லை. அவரது சிறு வயதிலேயே தாயான ஜமுனா தேவி இறந்தார். அதன் பின்னர், சோகத்தை சுமந்த சடோபா சிங் இவரை தாயுமானவனாய் வளர்த்தார். சர்வ சுதந்திரத்துடன் அன்பு மகளை வளர்த்தார். அக்கால சமூக நிலைமையின்படி, ஜல்காரிபாய் முறையான ...