சங்க மூத்த உறுப்பினர் தோழர் எஸ்.இளஞ்செழியன் அவர்களின் நலம் விசாரித்தல்

நமது சங்கத்தின் மூத்த உறுப்பினர் தோழர் இளஞ்செழியன் அவர்களை 10 நாட்களுக்கு முன்பு தொடர்பு கொண்டு 6 ஆம் தேதிய மாதாந்திர கூட்டத்துக்கு (பள்ளிக்கரனை வட்டக்கிளை) அழைத்தேன்.தற்போது உடல் நலம் இல்லாமல் மருத்துவ சிகிச்சை எடுத்து வருவதாகவும் நலம் பெற்றவுடன் கூட்டத்துக்கு வருவதாகவும் கூறியிருந்தார்.நேற்று கூட்டத்திற்கு வரவில்லை.கூட்டம் முடிந்தவுடன் அவரது இல்லம் சென்று நானும் நமது சங்கப் பொருளாளர் தோழர் ஜி.கன்னையன் அவர்களும் அவரை நலம் விசாரித்தோம்.அவரது உடல் பிரச்சினை மற்றும் அதற்கு மேற்கொண்டு வரும் சிகிச்சை பற்றி விளக்கமாகத் தெரிவித்தார்.உடல் நலம் குன்றி ஓய்வு எடுத்து வரும் நிலையிலும் சங்கத்துக்கு ஆற்ற வேண்டிய கடமையினை அவர் மறக்கவில்லை.அவருக்கும்,அவரது துணைவியாருக்கும் சேர்த்து உறுப்பினர் கட்டணம் ₹700/__ இனைப் பொருளாளரிடம் வழங்கினார்.அவருக்கும் அவரது துணைவியாருக்கும் பள்ளிக்கரனை வட்டக்கிளை சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அவர் முழுமையாக உடல்நலம் பெற்று சங்கக் கூட்டத்தில் கலந்து கொள்ள வாழ்த்துகள். ஏற்கெனவே சங்க உறுப்பினர்கள் ஆக இருந்தவர்கள் 38 பேரில் 10 பேர் மட்டுமே சங்க உறுப்பினர் பதிவைப் புதுப்பித்துள்ளார்கள்.குறைந்தபட்சம் மாதம் 5 பழைய உறுப்பினர்கள் இல்லம் சென்று உறுப்பினர் பதிவைப் புதுப்பிப்பதுடன் அவர்களுடனான குடும்ப உறவுகளை மேம்படுத்த வேண்டும் என்று வட்டக்கிளை நிர்வாகிகள் சார்பில் தீர்மானித்துள்ளோம்.சங்கம் என்பது சந்தா சேர்ப்பதற்கு மட்டுமே அல்ல.அவர்களுடனான குடும்ப உறவுகளை மேம்படுத்துதல் அவர்களது ஓய்வூதியம் மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க உதவுதல் ஆகியவையும் சங்க நிர்வாகிகளின் கடமையுமாகும்.சங்கத்தின் மற்ற உறுப்பினர்கள் இல்லங்களுக்கு விரைவில் செல்ல இருக்கிறோம்.நன்றி.வணக்கம்.

Comments

Popular posts from this blog

பிரபல நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி யின் நாவல்'நள்ளிரவின் குழந்தைகள் பற்றிய சுருக்கமான அறிமுகம்.

LFAD Retired officials Reunion 2025 Annual get_tohether

தோழர் பி.ஆர்.சி அவர்களுக்கு நினைவஞ்சலி