Posts

Showing posts from August, 2025

இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் பகதூர் ஷா

Image
 #முதல் _இந்திய சுதந்திரப் போரின் தலைவர் #பகதூர்ஷா_ பிரிட்டீஷாரின் அதிகாரம் இந்தியா முழுவதும் பரவியிருந்த காலகட்டம். தங்களது ஆட்சி விரிவாக்கத்திற்காகராஜாக்கள், நவாப்கள் மட்டுமல்லாமல் டில்லி முகலாய மன்னர்களின் ஆட்சியிலும் தலையிட்டனர். மன்னர்களுக்குபிறந்த நாள் பரிசளிக்கும் வழக்கத்தை நிறுத்தினர். இந்தச் சூழலில் தான் 1837 –இல் பகதுர்ஷா ஜஃபர் டில்லி அரியணையில் ஏரினார். மக்கள் மத்தியில் பகதுர்ஷாவுக்கு இருந்த செல்வாக்கை முறியடிக்க பிரிடடீஷார் செய்த முயற்சிகள் பல. 1847 – இல் ஆங்கில அதிகாரி கெய்த் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில், நாளை ஈத் பெருநாள். முஸ்லிம்கள் மாடுகளைக் குர்பான் (பலி) கொடுப்பர். இந்துக்களின் புனித வழிபாட்டுக்குரியதான மாடுகளை முஸ்லிம்கள் குர்பான்கொடுப்பதா? என்று இந்துக்கள் கொதித்தெழும் சூழலை உருவாக்கியுள்ளேன். எனவே நான் நாளை டில்லியில் இந்து – முஸ்லிம் கலவரத்தை எதிர்பார்த்துக்  காத்திருக்கிறேன். நான் எதிர் பார்க்கும் நல்ல செய்தியும் அதுவாகத்தான் இருக்கும். என்று பகதுர்ஷா ஆட்சியை சீர்குலைக்க இந்து – முஸ்லிம் கலவரத்தைத் தூண்டிவிடும் தன் எண்ணத்தைவடித்துள்ளான். ...

11_8_25விடுதலைப் போராட்ட வீரர் குதிராம் போஸ் நினைவுநாள்.

Image
#இன்று_விடுதலைப்_போராட்ட_வீரர்_குதிராம்_போஸ்_நினைவுநாள் குதிராம் போஸ் (Khudiram Bose , Bengali: ক্ষুদিরাম বসু )(டிசம்பர் 3, 1889 – ஆகஸ்ட் 11 ,1908) வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர்.  குதிராம் போஸ், பிறப்பு ... இளமை: 1889 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் நாள் வங்காளத்தின் மிதுனப்பூர் மாவட்டத்தில், ஹபிப்பூர் என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை திரிலோகநாத் போசு, தாயார் லட்சுமிப்ரியதேவி. சிறு வயதிலேயே நாட்டுப்பற்றுடன் வளர்ந்த குதிராம், தனது பதின்மூன்றாம் அகவையில் 1902 இல் அப்போதைய வங்க விடுதலைப் போராட்ட வீரர்களின் ஆசானாக விளங்கிய அரவிந்தர், சகோதரி நிவேதிதை ஆகியோரின் சொற்பொழிவுகளால் ஈர்க்கப்பட்டார். சிறு வயதிலிருந்தே கீதையைப் படித்து அதன்படி நடக்க முயன்றார். ஆங்கிலேய ஆட்சியை முறியடிக்கத் தானும் ஏதாவது வழியில் உதவ வேண்டும் எனக் கருதினார். 1904 ல் மேதினிப்பூரில் உள்ள கல்லூரியில் சேர்ந்தார். அங்கு ஆசிரியர் சத்தியேந்...