ஆன்லைன் பணமோசடிகள் அதிகரிப்பு.எச்சரிக்கை தேவை
கடந்த சில மாதங்களாக ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருவது கவலை தரக்கூடிய விடயமாக மாறிவிட்டது.ஒரு பக்கம் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபட்டு பணியிலுள்ள இளைஞர்களும் பெருமளவில் பணத்தை இழந்து வருகின்றனர்.இதற்கிடையில் ஆன்லைன் கைது போன்ற வீடியோ அழைப்பு மூலம் பல அப்பாவி மக்கள் பெருந்தொகையினை இழந்து வருகின்றனர்.அதிலும் இத்தகைய மோசடியில் ஈடுபட்டு வருவோர் ஓய்வுபெற்ற மூத்த குடிமக்களைக் குறிவைத்து பணம் பறிக்கும் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்று வெளியான மாலை முரசு இதழில் மும்பையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் ₹5.50கோடியை இத்தகைய மோசடியில் இழந்துள்ளார் என்று செய்தி வந்துள்ளது.காவல்துறையோ அல்லது சிபிஐயோ டிஜிட்டல் முறையில் நடவடிக்கைகள் எடுக்க மாட்டார்கள் என்று பொதுமக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு டிஜிட்டல் மோசடியில் பணம் இழந்த பொதுமக்கள் உடனடியாக 1930 என்ற எண் மூலம் காவல்துறையைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும்.மேலும் இந்த புகாரை டிஜிட்டல் மூலம் பதிவு செய்யவும் வேண்டும்.இது தொடர்பாக இணைய தளங்களில் எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என்றும் வழிகாட்டுதல்கள் இருக்கின்றன.இவற்றையும் பயன்படுத்த வேண்டும்.இனியாவது பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து இத்தகைய பண மோசடிகளில் இருந்து தப்பிக்க வேண்டும்.
Comments
Post a Comment